தேமுதிக தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த் அங்கு 40 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில், தே.மு.தி.க. ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக, காஞ்சி வடக்கு மாவட்ட செயலரும், முன்னாள், எம்.எல்.ஏ.,வுமான முருகேசன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், அமெரிக்காவில் சிகிச்சை பெறும், விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி, கந்த சுவாமி கோவிலில், இம்மாதத்திற்குள் தங்க தேர் இழுப்பதாக முடிவு செய்தனர்.