ஜெபகர் அலி கொலை- அடுத்தடுத்து நடவடிக்கைக்கு உள்ளாகும் அதிகாரிகள்

Prayer Ali case; Successive officers

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் அதிகமாக கனிமக்கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் மேல் புகார் கொடுத்த அதிமுக பிரமுகரான வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகபர் அலி கடந்த 17 ந் தேதி மினி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இதையடுத்து வலையன்வயல் ஆர் ஆர் கிரஷர் உரிமையாளர்களான அதிமுக ராமையா, ராசு, ராசு மகன் தினேஷ்குமார், கொலைக்கு பயன்படுத்திய லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெகபர் அலி கொல்லப்பட்டதற்கு மேலும் சில சுரங்கத்தைச் சேர்ந்தவர்களும், அரசு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் பங்கு இருக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்ததுடன் ஆர்ப்பாட்டங்களும் செய்தனர். அதேபோல தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோரிக்கை வைத்தனர். மேலும் விசாரணையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்த நிலையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது.

Prayer Ali case; Successive officers

சிபிசிஐடி விசாரணை தொடங்கும் போது இந்த வழக்கை விசாரித்து வந்த திருமயம் ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து நான் கொடுத்த மனுவை கிரஷர் முதலாளிகளிடம் திருமயம் வட்டாட்சியர் புவியரசன் கொடுத்துவிட்டார் என்று ஜெகபர் அலியால் குற்றம்சாட்டப்பட்ட வட்டாட்சியர் புவியரசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று வியாழக்கிழமை புதுக்கோட்டை கனிமவளத்துறை உதவி இயக்குநர் லலிதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜெகபர் அலி கொலையை தொடர்ந்து போலீசார், வருவாய் துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்து வருவதால் பொதுமக்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் முறையான விசாரணையில் ஜெகபர் அலி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

police Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe