Tamilisai Soundararajan

Advertisment

போலியான செய்திகள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், போலி செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்ற கருத்தரங்கில் பிரகாஷ் ராஜ், கும்பலாக சேர்ந்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்தள்ளன. உள்நோக்கத்துடன் ஒருவர் மீதோ, அமைப்புகள் மீதோ பொய்ச்செய்திகள் பரப்பப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் வலதுசாரி அமைப்புகளால் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. மாட்டிறைச்சி விவகாரத்தில் வதந்திகள் பரப்பப்பட்டு தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன என்றார்.

இந்த நிலையில் சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திரைக்கதை தெரிந்த பிரகாஷ் ராஜுக்கு, சுதந்திர நாட்டின் கதை தெரியுமா? நடிகர் பிரகாஷ் ராஜ் போன்றோர்களால் தான், சமூகத்தில் போலி செய்தி பரப்பப்படுகிறது என்றார்.