Prakash Raj reaction to elon musk twitter blue tick issue

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். ப்ளூ டிக் என்பது பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், உரிய பணத்தைக் கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் எனும் முறையைக் கொண்டு வந்தார்.

Advertisment

மேலும் மாத சந்தா ரூ.900 கட்டாதவர்களின் ப்ளூ டிக் பறிக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் சில சினிமா பிரபலங்களுக்கு ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. இதன்படி, விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களின் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரசியலில்முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டமுதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் எனப் பலரின் கனக்குகளில் இருந்தும் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

Advertisment

அந்த வகையில் பிரகாஷ் ராஜின் ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்ட நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாய் பாய் ப்ளூ டிக்...நீங்கள் இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனது பயணம், பேச்சு, பகிர்வு மக்களுடன் தொடர்ந்துகொண்டிருக்கும். உங்களை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.