Skip to main content

மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமி விரைவில் கைது? - முன்ஜாமின் மனு தள்ளுபடி! 

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

 

மூத்த பத்திரிகையாளர்  பிரகாஷ்  எம்.சுவாமி  மீது   காயத்ரி சாய் என்கிற பெண்மணி கொடுத்த புகாரின்பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின்படி  தமிழ்நாடு மகளிர் வன்புணர்வுத் தடைச் சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்துள்ளது இராயப்பேட்டை அனைத்து  மகளிர் காவல்நிலைய போலீஸ். இந்த, வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பிரகாஷ் எம் சுவாமி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டதால் விரைவில் கைதுசெய்யப்படுவார் என்கிறது கோர்ட் வட்டாரம். 
 

 

p


சென்னை  கோபாலபுரத்தில்  வசித்துவரும்  காயத்ரி சாய் என்கிற பெண்மணி,  முதலில் முகநூல் லைவ் வீடியோ மூலம் பத்திரிகையாளர்  பிரகாஷ் எம். சுவாமி  மீது பாலியல் குற்றச்சாட்டுகளை  தெரிவித்தார்.  2018 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட  அந்த வீடியோவில், "எனது  கணவரின்  மறைவுக்குப் பிறகு,  எனது மகனுக்கு பாஸ்போர்ட் வாங்கித்  தருவதில் உதவிகரமாக இருப்பதாகக் கூறி  பிரகாஷ் எம். சுவாமி என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்" என்று  கூறியிருந்ததோடு அதுகுறித்து காவல்துறையில் புகாரும் கொடுத்திருந்தார். 


 
2019 மே  27 தேதியிட்ட  முதல் தகவல் அறிக்கையின்படி,  ஜூலை மாதம் 2018 மாலையில்,  காயத்ரியின் மகனுக்கு  பாஸ்போர்ட்  தொடர்பாக உதவுவதாகக் கூறிக்கொண்டு அவரது  வீட்டிற்கு பிரகாஷ் எம். சுவாமி சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுபற்றி காயத்ரி கூறுகையில்,    “அவர் என் அருகில் அமர்ந்து ( பிரகாஷ் எம்.சுவாமி நடந்துகொண்ட விதம் குறித்து காய்த்ரி சாய் எஃப்.ஐ.ஆரில் வேதனையுடன் குறிப்பிட்டிருப்பது மிகவும் பாலியல் வன்முறையாக உள்ளது) என் தோள்மீது கையை  போட்டுக் கொண்டு தவறாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்.  நான், பயத்தில் அலறித்துடித்ததும்  வீட்டில்  இருந்தவர்கள் ஓடிவந்து  என்னை அவரது பிடியிலிருந்து காப்பாற்றினார்கள். நான்,  அவரை  என் தந்தை ஸ்தானத்தில் தான் பார்த்தேன்” என்கிறார்.

 
 பிரகாஷ் எம். சுவாமி  பல ஆண்டுகளாக  இதுபோல் பல பெண்களிடம் தவறாக நடந்து வந்துள்ளார். அவர்கள்,  இதை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காக மிகப்பெரிய தலைவர்களுடன்  தான்  எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி மிரட்டி இருக்கிறார்  என்றும் குற்றம்சாட்டுகிறார் காயத்ரி.

 
இந்த, சம்பவத்திற்குப் பிறகு  தொலைபேசி மற்றும்  இணையதளம்  வாயிலாக தரக்குறைவான  குறுஞ்செய்திகளை  அனுப்பிய பிரகாஷ் எம். சுவாமி தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார்  என காயத்ரி தனது முகநூல் பதிவுகளில் குமுறியிருக்கிறார்.  
 

மேலும்,  மாரடைப்பால்  இறந்துபோன  தனது கணவரை,  நானே கொன்றுவிட்டதாக பிரகாஷ் எம். சுவாமி  தவறாக பரப்பி விட்டார்.  இதையடுத்து எட்டு மாதங்கள் கழித்து சென்னை இராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து பிரகாஷ் எம். சுவாமி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

பாதிக்கப்பட்ட காயத்ரியும் முன்ஜாமீன் வழங்க கூடாது என மனுத்தாக்கல் செய்தார். அந்த இரண்டு மனுக்கள் மீதும்  கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதியரசர் இளந்திரையன்  இன்று(2019 ஜூலை-  11 ந்தேதி) பிரகாஷ் எம் சுவாமியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம் சுவாமி விரைவில் கைது செய்யப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் காய்கறி, மளிகைக் கடைகள் திறந்திருக்கும்- சென்னை மாநகராட்சி!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் பால், காய்கறிகள், பழங்கள், மளிகை விற்பனை செய்யும் சிறு வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும். இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளும் தொடர்ந்து செயல்படும். கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். கடைகள் மூடப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

CHENNAI MUNICIPAL CORPORATION CORONAVIRUS SHOPS CLOSURE

>

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய வணிக நிறுவனங்களை மட்டுமே மூட உத்தரவு; சிறிய கடைகளுக்கு அல்ல. சென்னையில் மால்கள், சினிமா தியேட்டர்களை மட்டுமே மூடியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதியே பெரிய வணிக நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது." இவ்வாறு சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. 

 

Next Story

’போகப் போக தெரியும்’-புதிர் போடும் தினகரன்

Published on 26/05/2019 | Edited on 26/05/2019

 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர்,   நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.   ஆனாலும், மக்களின் தீர்ப்பை தலைவணங்கி வரவேற்கிறோம்.  அமமுகவின் செல்வாக்கு போகப்போக தெரியும்.   அமமுகவிற்கு சில பூத்களின் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் பூஜ்ஜியம் என காட்டியுள்ளது. நாங்கள் கணக்கெடுத்ததன்படின் 300 வாக்குச்சாவடிகளில் எங்களுக்கு பூஜ்ஜியம் என காட்டுகிறது.  எங்கள் முகவர்கள்  போட்ட ஓட்டு எங்கே?  முகவர்கள் வாக்குகள் கூட பதிவாகாமல் போனது பற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் தர வேண்டும்.   

ட்


 
திமுக வென்ற எம்.பி. தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வென்றது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினார்.

 

தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.   எடப்பாடி ஆட்சி நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.


திமுகவுடன்  அமமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்று அதிமுகவின் குற்றச்சாட்டு குறித்து,   திமுகவுடன் மறைமுக கூட்டணி என்றால் செந்தில்பாலாஜி ஏன் திமுகவுக்கு செல்கிறார் என்று பதில்கேள்வி எழுப்பினார்.  

 

பிரிந்தவர்கள் மீண்டும் சேரவேண்டும் என்ற அதிமுகவின் அழைப்பு குறித்து,   இணைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  அது அவரவர் விருப்பம் என்றார்.  

 

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அமைப்பு செயலாளரும், தென் மண்டலப் பொறுப்பாளருமான ஆர்.பி.ஆதித்தன், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தது குறித்து, செந்தில்பாலாஜி பிரிந்து சென்றார் என்றால் அது அவரின் புத்திசாலித்தனம். அமமுகவில் இருந்து விலக விரும்புபவர்கள் தாராளமாக விலகிக்கொள்ளலாம்.  உண்மை யானவர்கள்தான் எங்களுக்கு தேவை என்று தெரிவித்தார்.