Advertisment

'பாராட்டும்... லஞ்சமும்...'-வீடியோவில் சிக்கிய செவிலியர்

 'Praise... Bribe...' Nurse caught in video

தன்னுடைய சேவைக்காக மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு வாங்கிய செவிலியர் ஒருவர் மருத்துவமனையில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஷீலா. அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது அவருடைய சேவைக்காக மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்றதோடு பாராட்டு சான்றிதழையும் பெற்றிருந்தார். இந்நிலையில் செவிலியர் ஷீலா மருத்துவமனையில் பொதுமக்களிடம் மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே லஞ்சம் வாங்குவதாக வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்த சம்பவம் புகைச்சலை ஏற்படுத்த, இது குறித்து சம்பந்தப்பட்ட செவிலியர் ஷீலாவிற்கு மெமோ கொடுத்துள்ளதாக பட்டுக்கோட்டை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மீனா தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது விடுப்பில் சென்றுள்ளதால் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மெமோ கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற செவிலியர் லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

nurses pattukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe