Advertisment

உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!

Pragyananda, the young player who defeated world champion Carlson again!

சாம்பியன் செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.

Advertisment

ஆன்லைனில் நடைபெற்று வரும் சாம்பியன் செஸ் போட்டி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாதந்தோறும் ஒன்பது தொடர்களாக நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாத போட்டியில் உலக சாம்பியனான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை 16 வயதே ஆன பிரக்ஞானந்தா வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Advertisment

தற்போது சாம்பியன் செஸ் போட்டியின் நான்காவது தொடர் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஐந்தாவது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆட்டத்தைத் தொடங்கிய அவர், 41வது நகர்த்தலில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் போதிலும், இந்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என தான் எண்ணியதாக பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

champion Chess
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe