நேற்று சென்னையில் நடந்த ‘கலைஞர் புகழஞ்சலி’ கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரபுல் படேல் கூறியது,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
இந்திய அரசியலின் டைட்டன்களில் ஒருவரான, உயர்ந்த தலைவரான கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தவே நாம் இங்கு கூடியிருக்கிறோம். அவர் தமிழ்நாட்டிற்கு மட்டும் தலைவரல்ல உண்மையை சொன்னால் அவர் ஒட்டுமொத்த தாய்நாட்டிற்கும்தான் தலைவர். பலர் அவரவர்களுக்காகவே பிறக்கிறார்கள், ஆனால் வெகுசிலரே மற்றவர்களின் வாழ்க்கையையும், நிலையையும் மாற்றுவதற்காக பிறக்கிறார்கள் அப்படி பிறந்தவர்தான் கலைஞர். நான் என்வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன். சென்னை மற்றும் மதுரை விமான நிலையம் நவீனமயமாக்க வேலை நடந்துகொண்டிருந்த சமயமது. நான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருந்தேன், கலைஞர் முதலமைச்சராக இருந்தார். எனக்கு அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் உணர்ந்தேன் அவரது சுறுசுறுப்பையும், நவீன சிந்தனைகளையும். அவர் கேட்ட கேள்விகளின் மூலம் அவருக்கு நாட்டின் மீதிருந்த பார்வையை புரிந்துகொள்ள முடிந்தது. இதுதான் அவர்களை உயர்த்துகிறது. நான் ஒரு செய்தித்தாளில் பார்த்தேன் கலைஞருக்கு பாரதரத்னா வழங்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது. மு.க. ஸ்டாலின் கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும். ஸ்டாலின் தலைமையில் திமுக வளரும். மீண்டுமொருமுறை என் அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன்...
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">