Practicing RSS Rally in Corporation School; There was a stir when the video was released

Advertisment

கோவை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் எந்த நிகழ்ச்சி நடத்தவும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தனியார் அமைப்பினர் பயிற்சி நடத்துவது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அத்துமீறி உள் நுழைந்ததற்காகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி நடந்தது குறித்து விளக்கமளிக்க தலைமை ஆசிரியருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின்பயிற்சியை எதிர்த்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.