Practicing doctors strike against senior doctor for harassment

Advertisment

அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு மூத்த மருத்துவர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கல்லூரி மாணவிக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மருத்துவ அலுவலர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.