Advertisment

பிரபுதேவா, டிரம்ஸ் சிவமணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

d

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தி:

‘’பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைமை குரு தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீகம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு - பெண்களின் சமத்துவத்திற்காக பாடுபட்டு வரும் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களின் பணி பல்லாண்டு தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Advertisment

இதேபோன்று பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள நடிகர் பிரபுதேவா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ், சமூகசேவகி மதுரை சின்னப்பிள்ளை, கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.வி.ரமணி, டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமசாமி வெங்கடசாமி ஆகியோருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள அனைவரும் தமிழகத்தின் பெருமையை இந்திய அரங்கில் மட்டுமின்றி - உலக அரங்கிலும் நிலை நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை நினைத்து நினைத்து உள்ளம் பூரிக்கின்றேன். அனைவரது பணிகளும் மென்மேலும் தொடர்ந்து - தமிழகத்திற்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமைகளும், புகழும் எந்நாளும் குவிய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.’’

prabudeva drums sivamani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe