/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/03_29.jpg)
கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவும், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ. பிரபுவுக்கும், சௌந்தர்யாவுக்கும் திருமணமான புகைப்படங்கள்சமூகவலைதளங்களில் பரவியது.
அதனை தொடர்ந்து சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன், அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்துதான், தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு, கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் ஏற்கொள்ளப்பட்டு இன்று சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவரது தந்தையையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன், எம்.எல்.ஏ. பிரபு மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_42.jpg)
அதன்பின் வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலையில் சௌந்தர்யா, "தன்னை யாரும் கடத்தவில்லை. நான் முழுவிருப்பத்துடனேயே எம்.எல்.ஏ. பிரபுவை திருமணம் செய்துக்கொண்டேன்" வாக்குமூலம் அளித்தார். மேலும் தந்தையுடன் பேசி வேண்டும் என சௌந்தர்யா விருப்பம் தெரிவித்ததையடுத்து, நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அதனை தொடர்ந்து தன் தந்தையுடன் பேசிவிட்டு சௌந்தர்யா அவரின் கணவருடன் சென்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)