ADVERTISEMENT

கோடிக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்து பேரழிவு! பி.ஆர்.பாண்டியன் வேதனை

05:55 PM Nov 19, 2018 | rajavel



தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதிகளில் பாச்சூர், பழஞ்சூர், வேப்பங்காடு, சேதுபாவாசத்திரம், குருவிகரம்பை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை இன்று (19.11.2018) தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்.

ADVERTISEMENT


இதனைத் தொடர்ந்து அவர், தென்னை, வாழை, பலா, மா உளளிட்ட மரங்கள் அழிந்து விட்டன. கோடிக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கிறார்கள். தமிழக காவிரி டெல்டாவை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கிராமங்கள் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் முடங்கி கிடக்கின்றன.

ADVERTISEMENT



குடி தண்ணீரின்றி அவதிபடுகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு சொல்லொனா துயரத்திற்க்கு தள்ளபட்டுள்ளனர். உடனடியாக நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். விழுந்த மரங்களை அப்புறப்படுத்தவே முடியாத நிலை உணர்ந்து அரசே அப்புறப்படுத்த வேண்டும். மறு உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்ரகாள்ள வேண்டும் என்றார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் தபுண்ணியமூர்த்தி. என்.அண்ணாதுரை, துரைபாஸ்கரன், எம்.மணி, திருப்பதிவான்டையார் விஜயக்குமார், அறிவு பழஞ்சூர் இளங்கோ, ரெகுபதி உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT