pr pandian

Advertisment

திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடங்கியுள்ள பிரசார பயணத்தில் புஷ்பவனம் கடற்கரை கிராமத்தில் பிரச்சாரக்குழுவிற்கு தலைமையேற்றுள்ள தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும் போது...

திருக்காரவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் கடலூர் முதல் கோடியக்காடு வரை கடல் பகுதி முழுவதும் பேரழிவு ஏற்பட உள்ளது. மீன்பிடி உரிமை பறிபோகும், வாழ்வாதாரம் அழியும் என்றும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து மீனவர்களும் விவசாயிகளோடு இணைந்து போராட வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீளவில்லை சுமார் 70 நாட்களுக்கு மேலாகியும் மீன் பிடிக்க செல்லவில்லை வருவாய் இழந்து முடங்கி கிடக்கின்றனர். மிகுந்த மீளாத்துயரத்தில் உள்ளனர். கடல் களியால் கடற்கரை சூழப்பட்டு, படகுகள் புதையுண்டு கிடக்கிறது. இதுவரையில் மறுசீரமைப்பு பணிகள் துவங்கவில்லை. 10க்கும் மேற்பட்ட மண் அகற்றும் இயந்திரங்கள் நிறுத்திய நிலையில் உள்ளது. முதலமைச்சர் உடன் தலையிட்டு அவசரக்கால நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என்றார்.