
ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் கவனஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். திமுக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தி இந்த போராட்டமானது இன்று நடைபெற உள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே ஜவுளித்துறையில் நூல் விலை உயர்வு காரணமாக ஈரோட்டில் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Follow Us