Power Star Srinivasan

சென்னை அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisment

நேற்று காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பவர்ஸ்டார் சீனிவாசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சீனிவாசன் செல்போனை எடுக்கவில்லை. இதன் பிறகே போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் நடித்து வந்த போதிலும் அவர் மீது மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. ஒருமுறை கைதாகி திகார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். கடன் பிரச்சனையில் அவர் சிக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. எனவே அவர் கடன் காரர்களின் பிடியில் சிக்கி இருக்கலாமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.