Skip to main content

பிக் பாஸ் சீசன் -3 ல் பவர் ஸ்டார்!

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

உலகளவில் புகழ் பெற்ற பிக் பாஸ் ரியாலட்டி ஷோ இந்தியை தொடர்ந்து எண்டாமேல் நிறுவனம் கடந்த 2017 ல் தமிழிலும் 2018 ல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அறிமுகம் செய்தது. பிக் பாஸ் முதல் சீசனை போல கடந்த பிக் பாஸ் சீசன் இரண்டில் எதிர்பார்த்த அளவு மக்களின் ஆதரவு கிடைக்க வில்லை காரணம் சீசன் ஒன்றில் இருந்ததை போல பெரிய அளவு சுவாரசியம் எதுவும்மில்லை.

bis boss 3


இந்தநிலையில் ஒரு வழியாக நாடாளுமன்றம்  தேர்தல் முடிந்து கமலேயே மீண்டும் பிக் பாஸ் சீசன் 3 ஐநிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஏற்பாடு செய்யப்படுவிட்டது. சீசன் டூ போல இல்லாமல் சுவாரசியம் அதிகரிக்க செட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 ல் நடிகர் பவர் ஸ்டார் பங்குபெற இருக்கிறார் என தகவல்கள் வந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

நீதிமன்றத்தில் ஆஜரான பவர் ஸ்டார் சீனிவாசன்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Power star Srinivasan appeared in the court regards check fraud case

ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரின் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூ.15 கோடி கடன் வாங்கித் தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். அதற்கு ஆவண செலவுக்காக ரூ.14 லட்சம் தர வேண்டும் எனக் கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு முனியசாமியிடம் பெற்றுள்ளார். பின்பு போலியான ஒரு காசோலையையும் கொடுத்துள்ளார். கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து பணத்தை வாங்கிவிட்டு போலி செக் கொடுத்துள்ளதாக சீனிவாசன் மீது முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார் பவர் ஸ்டார். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செக் மோசடி வழக்கில் ஆஜராகாமல் இருந்ததற்காக, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி ஆஜராகியுள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன்.