Skip to main content

முறைகேடு பத்திரத்தை நீக்க பதிவாளருக்கு அதிகாரம்- மசோதா தாக்கலாகிறது!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

Power to the Registrar to remove the abusive deed- Bill filed!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், இன்றைய கூட்டத்தொடரில் முறைகேடாக பதிவான பத்திரத்தை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு அதிகாரம் தர வழிவகை செய்யும் சட்ட மசோதாவை வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்கிறார். இந்த மசோதா மூலம், முறைகேடு பத்திரப்பதிவை ரத்து செய்ய நீதிமன்றம், மாவட்டப் பதிவாளரை நாடும் நடைமுறை மாற்றப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்