Advertisment

கிரிக்கெட்டுக்காக உத்தரவை மாற்றிய மின்வாரிய அதிகாரிகள்!

ஜீலை 9ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என ஜீன் 8ந்தேதி அறிவித்தது திருவண்ணாமலை மாவட்ட மின்வாரியம். இந்த மின் நிறுத்தத்தால் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள், திருவண்ணாமலை நகரத்தின் ஒரு பகுதி மின் நிறுத்தம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Advertisment

police

இந்த அறிவிப்பு வந்ததும், நீங்கள் எப்படி மின் நிறுத்தம் அறிவிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகளை பெரும்பாலான பொதுமக்கள் கேள்வி எழுப்ப அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர். மாதந்திர பராமரிப்பு பணிக்காக தான் நிறுத்துகிறோம் எனச்சொல்லியுள்ளனர்.

உலககோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. ஜீலை 9ந்தேதியான இன்று அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் – இந்தியாவும் விளையாடவுள்ளன.

Advertisment

இந்நிலையில் நீங்கள் மின் நிறுத்தம் செய்தால் என்ன அர்த்தம் என கேட்டுள்ளனர். தொடர்ச்சியான போன் கால்களால் நொந்துப்போன மின்வாரிய அதிகாரிகள், உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்தபின் தேதி குறிப்பிடாமல் மின் நிறுத்தத்தை தள்ளிவைத்து விட்டனர்.

cricket electicity thiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe