Advertisment

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் - தேதியை வெளியிட்டது மின்துறை 

The Power Department has released a special camp-date for linking Aadhaar number with e-account

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெளிவுபடுத்தி வந்தார். இதன் மூலம் எவ்வளவு கணக்குகள் உள்ளது. எவ்வளவு பில் ஆகிறது என்பதை எல்லாம் கணிப்பதற்கு இவை உதவும் எனவும் அதே நேரம் ஆதார் எண்ணை இணைத்தால்100 யூனிட் இலவசமின்சாரம் ரத்து என்றதகவல் பொய்யானது எனவும் தெரிவித்து வந்தார். அதேபோல் மின் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு முகாம்கள் தமிழக முதல்வரின் அனுமதி பெற்று விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் வரும் திங்கள் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் திங்கள் முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5.15 மணி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மின்வாரிய அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், பண்டிகை தினங்களைத் தவிர்த்து அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5.15 மணி வரைமுகாம்கள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe