சென்னை அடுத்த குன்றத்தூரில் இன்று(வியாழன்) நள்ளிரவிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கோடைகாலத்தில் மிகவும் சிரமப்பட்டனர்.
மின்வெட்டு ஏற்பட்டதனால் மக்கள் வீட்டினுள் புழுக்கத்தில்இருக்க முடியாமல் வீதியில் நின்றிந்தனர். குன்றத்தூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அந்த அழைப்பை யாரும் எடுத்து பேசவில்லை இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ப்திக்குள்ளாகினர்
தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து முடிந்த வரை எந்த மின்வெட்டும் இல்லை ஆனால் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.