senthil balaji

Advertisment

தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

பின்னர் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 17,100 மெகாவாட் மின் தேவை இருக்கும்போது 13000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்திசெய்யப்படுகிறது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும்போது நிலக்கரி கையிருப்பை அரசு வைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு தவறிவிட்டது" எனக் குற்றம் சாட்டினார். இந்த மின்வெட்டு காரணமாக சிறு,குறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள், மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர், இது குறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின்பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடமிருந்து 3000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும், இந்த ஆட்சியில்தான் இது மாதிரியான நிலைமை ஏற்படுவது மாதிரியான தோற்றத்தை உருவாக்கி பேசுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த இரு மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.