கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் பரங்கிப்பேட்டை, பெரிய மதகு, அகரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மனு ஒன்று அளித்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழக அரசு வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ 2000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வறுமைக்கோடு பட்டியல் அடிப்படையில் இப்பணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலகம் கண்காணிப்பின்கீழ் ஊராட்சி அலுவலக உதவியாளர்கள் மூலம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு எடுக்கும்போதே அரசின் புள்ளிவிவரப்படி வறுமை குறைவாக இருப்பதைக் காட்ட மோசடிகள் நடைபெற்றதை அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சுட்டிகாட்டியுள்ளது.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பேரூராட்சி உள்ளிட்ட பல கிராமங்களில் உண்மையான ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு இந்த நிதி கிடைக்க எந்த ஏற்பாடும் இல்லை. தகுதியற்றவர்களை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக கணக்கெடுப்பு நடத்தி மோசடி நடைபெற்றுள்ளது. மறு கணக்கெடுப்பை நடத்தி வறுமையில் வாழும் மக்களுக்கு அரசின் நிதி முறையாக சென்றடைய ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருள்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் வேல்முருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் விஜய், அசன் முகமது மன்சூர், சமூக ஆர்வலர்கள் கவுஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள் பாலமுருகன், பாண்டியன் உள்ளிட்ட கிராமபொது மக்கள் உடன் இருந்தனர்.