
நெல்லை மாவட்டத்தின் திசையன்விளையை அடுத்துள்ள உவரியைச் சேர்ந்தவர் தங்கசெல்வி (32). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆர்த்தி (19), தரணி (14) என இரு மகள்கள் உள்ளனர். தம்பதியருக்கிடையே ஏற்பட பிரச்சனை காரணமாக கணவனை விட்டுப் பிரிந்து சில வருடங்கள் தனியே வசித்து வந்த தங்கசெல்வி, அதே ஊரைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவரை 2 வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராஜ லக்ஷிகா என பெயரிட்டனர்.
மேலும் குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் என்பதால், வருமானம் குறைவு வறுமை காரணமாக கஷ்ட நிலையில் இருந்தவர்கள், மூன்றாவதும் பெண் பிள்ளை என்பதால் அதனை விற்க முடிவு செய்திருக்கிறார்கள். அதே சமயம் திசையன்விளையைச் சேர்ந்த தம்பதியரான செல்வகுமார்-சந்தன வின்சியா 20 ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவின் கோட்டயம் சென்றவர்கள் அங்கு ஒட்டல் நடத்தி வருகின்றனர். ஆனால் தம்பதியருக்கு குழந்தை இல்லாததால் கூட்டப்பனையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரியப்பனை தொடர்பு கொள்ள, அவர் மூலம், தங்க செல்வியின் குழந்தையை 1.40 லட்சம் கொடுத்து வளர்ப்பதற்காக வாங்கியுள்ளனர்.

குழந்தை விற்பனை குறித்ததகவல் நெல்லை குழந்தைகள் நல காப்பகத்திற்குத் தெரியவர, அவர்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய உவரி இன்ஸ்பெக்டர் செல்வி, குழந்தை கேரளாவிலிருப்பது தெரியவந்து, கேரளா சென்று குழந்தையை மீட்டிருக்கிறார். அத்துடன் குழந்தையை விலைக்கு வாங்கிய செல்வகுமார் அவரது மனைவி சந்தன வின்சியா குழந்தையின் தாய் தங்கசெல்வி, புரோக்கரான ஆட்டோ டிவைர் மாரியப்பன் 4 பேரையும் கைது செய்தவர்.
தலைமறைவான 2 வது கணவரான அர்ச்சுனனை விசாரணைக்காகத் தேடி வருகின்றனர்.இது குறித்து இன்ஸ்பெக்டர் செல்வியிடம் பேசிய போது. குடும்பத்தில் வறுமை 3 வதும் பெண் குழந்தையாகப் பிறந்து விட்டதே என்ற எண்ணம் காரணமாகப் குழந்தையை விற்றிருக்கிறார்கள். இவர்கள் முறையாக குழந்தை விற்க வில்லை. இது தொடர்பாக 5 பேரைக் கைது செய்திருக்கிறோம் என்றார். தற்பொழுது குழந்தை ஆலங்குளத்திலுள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)