Advertisment

நள்ளிரவில் பற்றி எரிந்த கோழிப் பண்ணை... ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின...! 

Poultry farm burnt at midnight, Rs 4 lakh worth of goods caught fire ...!

உளுந்தூர்பேட்டை தாலுக்கா, இருந்தை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் தனபால் என்ற சுபாஷ். அதே கிராமத்தில் இவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணை ஒன்று உள்ளது. அதில் இவர் சுமார் 6 வருட காலமாக கோழி வளர்ப்பு செய்து வருகின்றார். இந்த நிலையில், நேற்று இரவு அவரது கோழிப் பண்ணை திடீரென்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து தனபாலுக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

உடனே அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்த உரிமையாளர் தனபால், கோழிப்பண்ணை முழுவதும் எரிந்துசாம்பலானதைக் கண்டு,செய்வதறியாமல் கதறி அழுதார். அவருடைய வேதனை, இருந்தை கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது. இக்கோழிப் பண்ணையின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Advertisment

ulundurpet
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe