Advertisment

தள்ளிவைக்கபட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்... நாளை நடைபெறுகிறது

Postponed polio vaccination camp ... takes place tomorrow

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும்ஜனவரி 16 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து போடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால், போலியோ சொட்டு மருந்து கொடுப்பது தள்ளிவைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் நாளை (31.01.2021) நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 41,053 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகம் பொறுத்தவரை 70.20 இலட்ச குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

tomorrow polio camp polio vaccine
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe