posters in support of OPS were torn down !!

Advertisment

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவரது இல்லத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்று துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் போடிதொகுதியில் 'அடுத்த முதல்வர் ஓபிஎஸ்' என போஸ்டர் ஒட்டப்பட்டு சர்ச்சை எழுந்திருக்கிறது.இந்நிலையில் ஆலோசனை நடத்துவதற்காக மூத்த அமைச்சர் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள்தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்இல்லத்திற்கு வருகைவந்துள்ளனர்.

மூத்த அமைச்சர்களுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த திடீர் ஆலோசனையில் முக்கியமாக அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் தேனி, பெரியகுளம், தென்கரையில் ஓ.பி.எஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் தற்போது கிழிக்கப்பட்டதால்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ்-இன் வீட்டின் அருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.