அனுமதியின்றி சுவரொட்டி;  2 பேர் மீது வழக்கு!

Poster without permission; Case against 2 people!

சேலம் மாநகராட்சியில் விசிக கட்சியைச் சேர்ந்த இமயவரம்பன் கவுன்சிலராக உள்ளார். இவர், புலிக்குத்தி ஜங்ஷன் பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதியின்றி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் அளித்த புகாரின்பேரில், செவ்வாய்பேட்டை காவல்துறையினர் இமயவரம்பன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், சேலம் சட்டக்கல்லூரி மாணவர் பரத்ராம் என்பவர், சாதி ஒழிப்பு தமிழ் முன்னேற்ற சமுதாயம் என்ற பெயரில், அனுமதியின்றி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலையின் சுவரில் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்.

கிராம நிர்வாக அலுவலர் இலங்கேஸ்வரன் இதுகுறித்து அளித்த புகாரின்பேரில், பரத்ராம் மீது அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

police vck
இதையும் படியுங்கள்
Subscribe