Advertisment

‘பொறுத்தது போதும் தாயே, ஆணையிடுங்கள்..’ - பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

poster in support of Sasikala created a stir in Vellore

தமிழகம் முழுவதும், சசிகலா தலைமையில் அஇஅதிமுக ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் எனப் போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. அதே போன்று வேலூர் மாநகர மாவட்ட சார்பாக அ.இ.அ.தி.மு.க கட்சி வழி நடத்த வேண்டும் என வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் சென்னை பகுதிகளிலும் கட்சி ஒன்றிணைய வேண்டும் என வேலூர் மாநகர மாவட்ட தொண்டர்கள் போஸ்டர் ஒட்டிஉள்ளனர்.

Advertisment

அந்தப் போஸ்டரில் “பொறுத்தது போதும் தாயே, ஆணையிடுங்கள் பிளவுபட்டு பிரிந்து கிடக்கும் அ.இ.அ.தி.மு.க ஒன்றரை கோடி தொண்டர்களை மீண்டும் ஒன்றிணைக்க தலைமை அலுவலகத்திற்கு வாருங்கள் உங்களை நாடி நாங்கள் வருகிறோம். 2026-இல் தீய சக்திகளை ஒழித்து தமிழக மக்களை காத்திட மீண்டும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி அமைத்திட வாருங்கள் எனத்தொண்டர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டர் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Poster admk sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe