Advertisment

ஓபிஎஸ்க்கு ஆதரவான போஸ்டர்! தேனியில் பரபரப்பு!!

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பெரும் சரிவை சந்தித்தது. இந்த சரிவுக்கு காரணம்அ.தி.முக வில் ஒற்றைத் தலைமை இல்லாததால் சரியான முடிவு எடுக்க முடியவில்லை என்றும் இதனால்தான்அ.தி.மு.க வுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்றும் ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்தார்.

Advertisment

 Poster support for OPS!

இவருக்கு ஆதரவாக சில அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனையடுத்து அ.தி.மு.க.கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து தெரிவிக்க கூடாது என்றும் வருகிற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சி பணியாற்றுமாறும் அறிவுரை கூறி கூட்டம் முடிவுற்றது.

சென்னையில் அ.தி.மு.க கட்சி அலுவலகம் அருகிலேயே பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்க வேண்டும் என சிலர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இந்தநிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பரபரப்பு போஸ்டர்கள் ஒன்றுஒட்டப்பட்டு இருந்தது .

Advertisment

தர்ம யுத்த தொண்டர்கள் என பெயரிட்டு கட்சியையும், ஆட்சியையும் ஒ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கிவழிநடத்திச் செல்ல வேண்டும் என அதில்குறிப்பிடப்பட்டு இருந்தது. மழை நின்றும் தூவானம்விடாதது போல அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த போதும் இது போல சில சம்பவங்கள் நடைபெற்று வருவது. கட்சிக்குள் நெருக்கடியை உருவாக்கி வருகிறது என்பதையே காட்டுகிறது.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதி பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.கவால் வெற்றி பெற முடிந்தது .பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. இந்நிலையில் தொண்டர்கள் சிலர் ஒட்டி வரும் போஸ்டர்களால் அ.தி.மு.க வில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Poster admk ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe