
புதுக்கோட்டை நகரில் திரும்பிய பக்கமெல்லாம் 'எதிர்காலமே!' என்ற பெயரில் இன்பநிதி பாசறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் மண்ணைப் பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை. போராட்டக்களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை!' என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.
அதாவது இன்பநிதி பாசறை பற்றி பலரும் விமர்சிக்கலாம்.ஆனால் அந்த விமர்சனங்களே பிறகு உண்மையாகும் என்பதுபோல அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. நகரில் போஸ்டர்களை பார்த்த பலரும் விமர்சனங்கள் செய்ய மறக்கவில்லை.
இந்நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மணிமாறன், திருமுருகன் ஆகியோர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டக் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.சே.மணிமாறன் என்பவரும், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் என்பவரையும் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.