Advertisment

திவாகரனுக்கு  எதிராக கண்டன போஸ்டர்!

 Divakaran

சசிகலாவின் உடன்பிறந்த சகோதரரானதிவாகரன் தற்பொழுது இபிஎஸ்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இதனால் டிடிவி ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்து அங்கங்கே திவாகரனுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார்கள்.

Advertisment

இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி, வேடசெந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் திவாகரனுக்கு எதிராக கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில்கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதிலும் திவாகரனின் முயற்ச்சிகு வைக்கபட்ட முற்றுப்புள்ளி 'திவாகரன் எதிரிகளோடும் துரோகிகளோடும் கை கோர்த்துள்ளதை காலமும் தமிழகமும் ஒரு போதும் மன்னிக்காது', என டிடிவியின் தீவிர ஆதரவாளரான திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் ராமுத்தேவர் என்ற பெயரில் திவாகரனுக்கு எதிராக கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
against eps sasikala divakaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe