அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் நடத்திய தபால் அனுப்பும் போராட்டம்! 

Postal sending struggle organized by All India Student Congress!

நீட் தேர்வுக்கு எதிராகவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, இந்திய குடியரசுத் தலைவருக்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பிலும், அனைத்திந்திய இளைஞர் மன்றத்தின் சார்பிலும் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் இப்ராஹிம், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் துணைச் செயலாளர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிவா, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் சூர்யா, இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் முருகேசன் மற்றும் இளைஞர் பெருமன்றத்தின் விஷ்வா, கே.கே. முருகேசன், மாணவர் மன்றத்தின் கௌதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்களிடமிருந்தும் கடிதம் பெறப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.

neet
இதையும் படியுங்கள்
Subscribe