Skip to main content

ரசாயனம் இல்லாதா பேரீச்சை...  இயற்கை விவசாயம் செய்யும் போஸ்ட் மேன்!

Published on 31/05/2020 | Edited on 01/06/2020

 

 Post man doing natural farming ...


இயற்கை ஆர்வலர் போஸ்ட் மேன் சரவணன் தனது வீட்டில் பேரீச்சை மரம் வைத்து பழங்களை அறுவடை செய்து வருகிறார். அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோவில் எசனை கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கொள்கையில் ஏராளமான நாட்டு வகை நிழல் தரும் சுற்றுச்சூழலுக்குப் பயன் தரும் மரக்கன்றுகளை கிராம இளைஞர்களோடு நட்டு வைத்து பராமரித்து வருகிறார் சரவணன் . 
 


இந்நிலையில் பேரீச்சை மரத்தைத் தங்களது பகுதியில் பரிட்சார்த்தமாக சோதனை முறையில் சாகுபடி செய்வது என்று முடிவெடுத்தார். வீட்டுத் தோட்டத்தில் சாகுபடி செய்து தற்போது பேரீச்சங்காய்களை பறித்து தனது நண்பர்களிடம் உறவினர்களிடமும் தங்களது தோட்டத்தில் விளைந்த பேரீச்சங்காய்களைக் கொடுத்து வருகிறார். எந்தவித இரசாயன உரமும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விளைந்த பேரீச்சங்காய்களைச் சுவைப்பது சுவையாக இருப்பதாகச் சுவைத்துப் பார்த்தவர்கள் கூறினர்.
 

 

 Post man doing natural farming ...


மேலும் இது குறித்து இயற்கை ஆர்வலர், போஸ்ட் மேனாக வேலை பார்த்து வரும் சரவணன் கூறுகையில், துவர்ப்புச் சுவை நிறைந்த பேரீச்சங்காய்களைச் சாப்பிட கர்ப்பிணிகளுக்கு இரத்தம் நல்லமுறையில் உற்பத்தி ஆகும். வயதான பெண்கள் மற்றும் முதியோர்களும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம் என்றார். நாம் ஒவ்வொருவரும் வீட்டுக்கு ஒரு பேரீச்சை மரத்தை வைத்து நமக்குத் தேவையான பேரீச்சம் பழம் காய்களை பறித்துச் சாப்பிடலாம். இதுவும் தற்சார்பு வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்றார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

Sales of vehicles running on natural gas increase!

 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களுக்கான விற்பனை அதிகரித்துள்ளது. 

 

பெட்ரோல் மற்றும் டீசலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூபாய் 5 முதல் ரூபாய் 6 வரை செலவாகும் நிலையில், இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனத்திற்கு ரூபாய் 2 மட்டுமே செலவு பிடிப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சிஎன்ஜி எனப்படும், இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனத்திற்கு தேவை அதிகரித்துள்ளது. 

 

முன்னணி கார் விற்பனை நிறுவனங்களில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1,400 விற்பனையகங்கள் இருந்த நிலையில், தற்போது 3,700 ஆக அது அதிகரித்துள்ளது. இதனால் இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களின் விற்பனை விரைவில் புதிய மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Next Story

‘பணத்தை சேமிக்கலாம்... மின் செலவு குறையும்... குளிர்ச்சியாக இருக்கும்’ - புதிய முறையை விவரித்த தங்க. சண்முக சுந்தரம்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

கட்டுமான துறையில் அறிமுகமாகிவரும் தொழில்நுட்ப முறைகளில் 'ஃபில்லர் சிலாப்' (Filler Slab) என்ற முறை இன்று பிரபலமாகிவருகிறது. அரியலூர் அருகே கொள்ளிடக்கரையோர கிராமமான கீழக்காவட்டாங்குறிச்சி கட்டடம், சுற்றுச்சூழல் ஆர்வலர் நம்மாழ்வாரின் வழித்தோன்றலான தங்க. சண்முக சுந்தரம் இதுகுறித்து விளக்கமளித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, “ஃபில்லர் சிலாப் என்பது வழக்கமாக அமைக்கும் ஆர்.சி.சி., ரூஃப்தான். சிலாபின் அடிப்பகுதியான 'டென்ஷன் ஜோனில்' கான்கிரீட்டுக்குப் பதில் எடை குறைவான நாட்டு ஓடு, மங்களூரு டைல்ஸ் (துளையுடன் அல்லது துளை இல்லாமல்), களிமண் பானை, தேங்காய் ஓடுகள் போன்ற இயற்கை பொருட்களை அடுக்கிவைத்து இடைவெளியில் கம்பி கட்டி, சிலாப் மேல் கான்கிரீட் அமைப்பர். இதனால் 30 சதவீத கான்கிரீட் அளவு குறைவு, அதே நேரம் வழக்கமான கான்கிரீட் வலிமை குறையாது. கம்பி, சிமென்ட் அளவு குறைவதால் 25 - 30 சதவீதம் பணம் சேமிக்கப்படும்.

 

இது தவிர கட்டடத்தின் சுய எடை குறையும். இந்த ஃபில்லர் சிலாப் அமைப்பதால் உள்ளே பொதிக்கப்பட்ட ஆற்றல் சேமிக்கப்படுகிறது. களிமண் ஓடுகள் பயன்படுத்துவதால் அவை இயற்கையான இன்சுலேஷனை வழங்கும். வீட்டின் உட்பகுதி குளிர்ச்சியாகும். மின்செலவு குறையும். கார்பன் வெளிப்பாடு 30 சதவீதம் குறைவால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும். தரம், பாதுகாப்பு, கட்டமைப்பு, நிலையான அபிவிருத்தி என பல்வேறு அம்சங்களைக் கொண்டதுதான் இந்த ஃபில்லர் சிலாப் முறை.

 

இதுகுறித்து அறிவதற்கு - (8220365496) தங்க சண்முக சுந்தரம்.