Skip to main content

கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம் திறப்பு! (படங்கள்) 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு அளித்த பதிலுரையில் அறிவித்தபடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (01/07/2021) சென்னை, கிண்டியிலுள்ள கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தைத் (Post Covid Care Clinic) திறந்து வைத்தார். 

 

மேலும், வெளிநாடு செல்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசிச் செலுத்தும் பணியினையும், அங்கு அளிக்கப்படும் யோகா பயிற்சிகளையும் பார்வையிட்டார். 

 

இந்த நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி இயக்குனர் நாராயணபாபு, கிண்டி அரசு கரோனா மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்