
ஆளுங்கட்சியான திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளுக்கு நகர செயலாளர்கள் யார்? என தலைமை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் நகராட்சி நகர செயலாளராக மீண்டும் வெள்ளைச்சாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சருமான சக்கரபாணியின் தீவிர விசுவாசி.
கடந்த 1993ல் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த வெள்ளைச்சாமி அதன்பின் மாவட்ட துணைச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர், அதன்பின் நகரச் செயலாளர் என தொடர்ந்து பதவியிலிருந்து தொண்டர்களையும் அனுசரித்து வந்தார். நகர வளர்ச்சிக்காக தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை பேரில் கட்சியையும் வளர்த்து வந்தார். அதனடிப்படையில் தான் மீண்டும் நகர செயலாளராக அமைச்சரின் பரிந்துரையின் பேரில் வெள்ளைச்சாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த நியமனத்தை தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை சந்தித்து மாலை, சால்வை போட்டு வெள்ளைச்சாமி ஆசிபெற்றார். அதைத்தொடர்ந்து நகர கிளை பொறுப்பாளர்களும் வெள்ளைச்சாமியைச் சந்தித்து மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் கொடைக்கானல் நகர செயலாளராக மீண்டும் முகமது முகமது யூசுப்பும், பழனி நகர செயலாளராக முன்னாள் நகர்மன்றத் தலைவர் வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)