Skip to main content

பிரபலமாகும் அபிநந்தன் மீசை...சலூனில் அலைமோதும் இளைஞர் கூட்டம்!!

Published on 03/03/2019 | Edited on 03/03/2019

 

The popularity of Abhinanthan Mustache...in youths

 

இந்திய விமானப்படை போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் போன்று மீசை வைக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால் சலூன் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

 

விமானப்படை தாக்குதலின் போது  இந்திய  விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். அப்போது அவர் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலளித்த விதம் மற்றும் அவரது வீரத்தை ஒட்டுமொத்த நாடும் பாராட்டி வருகிறது. அதேபோல் அவரது மீசையும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

அவர் மீசை வைத்திருக்கும் அதே பாணியில் மீசை வைப்பதற்காக சலூன் கடைகளில் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது. திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பின்பற்றும் உடைகள் மற்றும் சிகை அலங்காரங்களை பின்பற்றும் இளைஞர்கள் தற்போது விமான படை வீரரின் மீசை போல் தாங்களும் மீசை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது என சலூன் கடை உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா?'-கேரளாவில் ஒரு மீசை நாயகி!

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

 Is it only for men?-A mustachioed women in Kerala

 

முகத்தில் முடி வளர்ச்சி என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயற்கையானது. இருப்பினும், அதிகப்படியாக  பெண்கள் அதை பெரும்பாலும் விரும்புவதில்லை. மீசை என்றாலே ஆணிற்கு சொந்தமான குறியீடு என்றே கருதப்படும் நிலையில் இந்த எல்லா விதிமுறைகளையும் உடைத்து, மீசை வளர்த்து அதில் பெருமிதமும் கொண்டுள்ளார் கேரள பெண் ஒருவர். அதுவும் மீசை இல்லாமால் வெளியே செல்வது எனக்கு அசவுகரியத்தைத் தரும் என தெரிவித்துள்ளதுதான் இதில் ஹை லைட்.  

 

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஷைஜா (35 வயது) என்ற பெண் மீசை வளர்ப்பதை ஆர்வமாக மேற்கொண்டு வருகிறார். உண்மையில், ஷைஜா அவரது புருவங்களைத் தொடர்ந்து திரித்துக் கொள்வார், ஆனால் அவரது மேல் உதட்டில் உள்ள முடியான மீசையை மட்டும் அகற்றுவது அவருக்கு பிடிக்காதாம். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அடர்த்தியாகிவிட்ட மீசை முடியை  ஷைஜா  அப்படியே வைத்திருக்க முடிவு செய்துள்ளார்.

 

"இப்போது மீசை இல்லாமல் வாழ்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது'' என தெரிவிக்கும் ஷைஜா, ''கோவிட் நோய் தொற்று தொடங்கிய போது, ​​மாஸ்க்கை எப்போதும் அணிவதை நான் விரும்பவில்லை, ஏனெனில் அது என் மீசையை மறைப்பது எனக்கு அசவுகரியத்தைத் தரும்'' எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் "என்னிடம் மீசை இருப்பதால் நான் அழகாக இல்லை என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. மீசையை  விரும்புவதால் தான் வளர்க்கிறேன். எனக்கு விருப்பமானதைத்தான் செய்கிறேன்''எனவும் தெரிவித்துள்ளார்.

 

ஷைஜாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அவரது மீசை வளர்க்கும் முடிவுக்கு ஆதரவாக உள்ளனர். அவருடைய மகளும் கூட அதை விரும்புகிறார். மக்கள் தன்னை கேலி செய்கிறார்கள் ஆனால் நான் கவலைப்படவில்லை என அசால்ட்டாக பதிலளிக்கிறார் இந்த மீசை நாயகி.

 

 

Next Story

வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Tamil Nadu Chief Minister congratulates Abhinandan on receiving Veer Chakra award

 

2019- ஆம் ஆண்டு புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இராணுவ விமானங்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றன. அப்போது விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார். அதேநேரத்தில் பாகிஸ்தானின் எஃப் 16 விமானம் நடத்திய பதில் தாக்குதலினால் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையில் குதித்த அவரை பாகிஸ்தான் சிறைபிடித்தது. அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன் பின்னர் அபிநந்தனுக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

 

இந்தநிலையில், பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது இன்று (22/11/2021) வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை வழங்கினார்.

 

இந்நிலையில், வீர் சக்ரா விருதை பெற்ற அபிநந்தனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்' என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்து தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் வீர் சக்ரா விருது பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.