ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். நடனத்துறையில் ஈடுபாடு கொண்டதால் ராகுல் டிக்கி என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். இந்நிலையில் மனைவியை அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற ராகுல் கவுந்தப்பாடி அருகே உள்ள சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானார்.
இதில் அவர் தலைக்கவசம் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அங்கு வந்த கவுந்தப்பாடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.