Skip to main content

100 மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா? அதிர்ச்சியில் பிரபல மருத்துவமனை!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
coronavirus

 

ஆசியாவில் மிக பிரபலமான மருத்துவமனை வேலூரில் உள்ள கிருஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்த மருத்துவமனை கல்லூரியில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக நோயாளிகள் வருவார்கள். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சிகிச்சைக்காக வருவார்கள். தினமும் 3 ஆயிரத்துக்கு அதிகமான நோயாளிகள் வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

 

கரோனா ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதம் முதல் மற்ற மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், சி.எம்.சி. வருபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. நோயாளிகளுக்கு, மருத்துவர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு, ஊழியர்களுக்கு பலவித முன்னேற்பாடுகள் செய்தும் அதனை பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவில்லை. அதேபோல் கரோனா நோயாளிகள் குறித்த பட்டியலையும் சி.எம்.சி. மருத்துவமனை நிர்வாகம் சரியாக தரவில்லை என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

 

இந்நிலையில் தற்போது சி.எம்.சி.யில் பணியாற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் என பலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஜூன் 23ந்தேதி சி.எம்.சி. மருத்துவமனை இயக்குநர், கண்காணிப்பாளர் அலுவலங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் எனக்கூறப்படுகிறது.

 

கரோனாவுக்கு சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள் பட்டியலில் சி.எம்.சி.யும் உள்ளது. அதேபோல் கரோனா பரிசோதனை செய்யும் மையத்துக்கான அங்கீகாரமும் சி.எம்.சி.க்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 163 பேர் சி.எம்.சி.யில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.