ranjith

Advertisment

அதிமுகவில் இருந்த நடிகர் ரஞ்சித், ராமதாஸ் மற்றும் அன்புமணி முன்னிலையில் பாமகவில் இணைந்துள்ளார்.

ஆர்.கே.செல்வமணியின் பொன்விலங்கு படத்தின் மூலம் அறிமுகம் ஆன ரஞ்சித், நேசம் புதுசு, சிந்துநதிப்பூ, பாண்டவர் பூமி, சபாஷ், பசுபதி ராசக்கா பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நேசம் புதுசு படத்தில் நடித்தபோது பிரியா ராமனை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். இத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

அதிமுகவில் இருந்த ரஞ்சித், ஜெ.வின் மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் அணிக்கு தாவினார். ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக தொலைக்காட்சி விவாதங்களில் எல்லாம் பங்கேற்றார்.

இந்நிலையில், ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்துள்ளார் ரஞ்சித்.