விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ளது ம.குன்னத்தூர். இந்த ஊரில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப்பெற்று வரும் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதனை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்து பிள்ளைகள் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு போதிய இடவசதி இல்லை. அரசு வகுப்பறை கட்டிடங்கள் கட்ட தயாராக இருந்தும் இடம் இல்லாததால் மாணவர்கள் கடும் இட நெருக்கடியில் படித்து வந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதற்காக தலைமையாசிரியர் கண்ணன், சமூக ஆர்வலர் தம்பிதுரை மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கடும் முயர்ச்சி செய்தனர். இதனையறிந்து பள்ளிக்கு அருகே இடம் வைத்திருந்த அதே ஊரை சேர்ந்த திமுக கிளை செயாளார் ஏழுமலை - சடையன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 30 சென்ட் இடத்தை பள்ளிக்கு இலவசமாக கொடுக்க முன் வந்துள்ளனர். இதிலே ஏழுமலைக்கு இரண்டு பெண் பிள்ளை, ஒரு மகன் உள்ளனர். திருமணமாகாத பெண் பிள்ளைக்கு அந்த இடத்தை தனிநபர்களிடம் விற்று அதை கொண்டு மகளை கட்டி கொடுக்கலாம் இலவசமாக பள்ளிக்கு கொடுக்கக்கூடாது என அவரது குடும்பத்தினர் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
ஆனாலும் ஏழுமலை பள்ளிக்கு இடத்தை இலவசமாக கொடுப்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் இன்னொருவரான சடையன் இதே ஊர் இப்போது மும்பையில் வசிக்கிறார். அவரது குடும்பத்தினரும் இடத்தை இலவசமாக கொடுக்க கூடாது என தடுத்துள்ளனர். சடையனோ ஏழை பிள்ளைகள் படிக்க நம் நிலம் உதவட்டும் என்று உறுதியாக இருந்ததோடு, குன்னத்தூரில் இருந்த தனது சம்பந்தி ஆறுமுகம் மூலம் இடம் தர உறுதியளித்ததோடு அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய சொல்லிவிட்டார்.
அதன்படி நேற்று முறைப்படி தங்கள் இடத்தை பள்ளிக்கு தானமாக எழுதி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மும்பையில் இருந்து சடையன் விமானம் மூலம் புறப்பட்டு வந்து ஏழுமலையுடன் சேர்ந்து பத்திரப் பதிவில் இருவரும் கையெழுத்திட்டனர். தங்களைப் போல ஏழை பிள்ளைகள் படிப்பில் முன்னேற தங்கள் இடத்தை தடைகளை கடந்து தானே முன்வந்து கொடுத்ததை கண்டு ஊர் மக்கள் மாலை,சால்வை போட்டு பாராட்டினார்கள்.