Poor quality food in restaurants; Introducing a new facility to inform the government confidentially

தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்க புதிய இணையதளம் - செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொது மக்களுக்குத்தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Advertisment

இதில் தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக, விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் புகார்களை டைப் செய்ய தேவையில்லை. மிக எளிதாக விவரங்களைத்தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் கைப்பேசி செயலி Tnfood safety consumer App ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறும்போது, தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள இணையதளம், கைப்பேசி செயலி மூலம் புகார் அளிக்கலாம். மேலும் புகார்தாரர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்றார்.

Advertisment