Advertisment

''ஏழைபாழைகள் கஷ்டத்தில் இருக்கோம்... இதெல்லாம் நியாயமா?''-செல்லூர் ராஜு பேச்சு!

அதிமுக இன்று தமிழ்நாடு முழுவதும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்படி இன்று மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்த பொழுது கலைஞர் பல்வேறு விமர்சனங்களை வைத்தார். பாடப்புத்தகங்களை எடுக்கும் பிள்ளைகளை தட்டேந்தி பிச்சை எடுக்க வைத்துவிட்டார் எம்.ஜி.ஆர். இந்த திட்டத்திற்கு நிதி இருக்கிறதா என்றார்.

Advertisment

இந்த திட்டத்தை செயல்படுத்த நிதி இல்லை என்றால் ராமச்சந்திரன் தெருவில் இறங்கி பிச்சையெடுத்தாவது இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் என்றார் எம்ஜிஆர். இதே மின்சார கட்டண உயர்வை நாம் கொண்டுவந்தபொழுது மு.க.ஸ்டாலின் என்ன சொன்னாரு 'மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். ஆனால் இனிமின்கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கும்' என்று சொன்னவர்தானே நீங்க. சொன்னீர்களா இல்லையா? இப்போ உங்க ஆட்சியில் மட்டும்என்ன நடக்குது. கட்டுமானப் பொருட்களின் விலை ஏறிப்போச்சு, சமையல் பொருள் விலைஏறிப்போச்சு, எந்த பொருளையும் வாங்க முடியாமல் ஏழைபாழைகள் கஷ்டத்தில் இருக்கோம். எங்களுடைய நெலமையெல்லாம் உங்களுக்கு தெரியுமா? ஒரேநேரத்தில் வீட்டுவரி உயர்வு, மின்கட்டண உயர்வு இதெல்லாம் நியாயமா? மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருகிறது திமுக. விரைவில் நடந்தால்கூட வரி போடுவார்கள். இப்படியும் செய்துவிட்டு தமிழகம் முதல் மாநிலம் என்று சொல்கிறார்கள். நாங்க வரி ஏத்துனா அடிமை அரசாங்கம் நீங்க ஏத்துனா அடிமை அரசங்கம் இல்லையா? அடிமைக்கு அடிமையா இருக்கீங்களே? இதுல காலம் முழுக்க திமுக ஆட்சியாம், காலமுழுக்க உங்க ஆட்சி வருமா?'' என்று ஆவேசமாகப் பேசினார்.

Advertisment

admk struggle
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe