Poor government housing in Perambalur too ... Public shock!

கோப்புப்படம்

கூவம், அடையாறு கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை மறு குடியமர்த்த, சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டன. முதற்கட்டமாக 764 வீடுகளும் இரண்டாவது கட்டமாக 1,056 வீடுகளும் என மொத்தம் 1,820 வீடுகள் கட்டப்பட்டன. கூவம், அடையாறு மற்றும் பக்கிங் கால்வாய் அருகே குடிசைகளில் வசிப்பவர்கள் பயனாளிகளாக அந்தக் குடியிருப்பில் குடியேறி இரண்டு - மூன்று மாதங்களே ஆகும் நிலையில், கட்டடத்தில் பல இடங்களில் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு தரமற்ற முறையில் இருப்பதாக அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சம் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

இந்த விவகாரம் பூதாகரம்ஆகியிருக்கும் நிலையில், இதுகுறித்து இன்று (19.08.2021) சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரம்பலூரிலும்இதேபோல் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்பில் தொட்டாலே கொட்டும் அளவிற்குசிமெண்ட் பூச்சுகள் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம்அருகே 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி நிறைவடைந்து இந்த ஆண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்தக் குடியிருப்பும் தரமற்று இருப்பதாகபுகார் எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment