poongothai aladi aruna explanation

நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதி தி.மு.கசட்டமன்ற உறுப்பினர், பூங்கோதை ஆலடி அருணா, உடல்நலக்குறைவால்நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisment

அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்கள்வெளியானநிலையில், இது குறித்து பூங்கோதை ஆலடி அருணா விளக்கமளித்துள்ளார். அதில், "தான் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வெளியான தகவல்கள்பொய்யானது. அது திரித்துவிடப்பட்டதகவல்கள். திடீரெனஏற்பட்டமயக்கதிற்கான காரணத்தைக் கண்டறிய சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருக்கிறேன். சர்க்கரை அளவும், ரத்தம் உறையும் தன்மையும்குறைவாகஉள்ளதாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது" இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.

Advertisment