p

திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன் தாயார் நிலோத்தம்மாள் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரியை சேரந்தவர் பூண்டி கலைவாணன். திமுக மாவட்ட செயலாளராகவும், திருவாரூர் திமுக வேட்பாளராகவும் இருந்தவர். கலைவாணனுக்கு முன்பு அவரது அண்ணன் கலைச்செல்வம் மாவட்ட செயலாளராக இருந்து, படுகொலை செய்யப்பட்டு இறந்தார். கலைவாணனின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

பூண்டி கலைவாணன் மற்றும் அவரது சகோதரர் பூண்டி கலையரசனோடு இருந்துவந்தார் திருமதி நிலோத்தம்பாள். அவர் இன்று காலை 10. 20 மணிக்கு இயற்கை எய்தினார். அம்மையாரது இறுதி ஊர்வலம் நாளை 22 -ம் தேதி கொரடாச்சேரி ஒன்றியம் நாலில்ஒன்று கிராமத்தில் நடைப்பெறுகிறது.

Advertisment

கலைவாணனின் தாயர் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.