pooja for treasure - Three arrested perambalur police

Advertisment

பெரம்பலூர் மாவட்டம், விளாமுத்தூர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் புதையல் எடுப்பதற்காக கடந்த மூன்று நாட்களாக குழி தோண்டி வருவதாக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, உடனடியாக அந்த வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், அங்கு மாந்திரீக பூஜை செய்து 20 அடி ஆழத்திற்குக் குழி தோண்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த வீட்டின் உரிமையாளரான ஐஸ் வியாபாரி பிரபு, பரமத்திவேலூர் பூசாரி கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏழு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்பொழுது பூசாரி கிருஷ்ணமூர்த்தி, அவரது உதவியாளரான சங்ககிரி அருகே உள்ள மகுடஞ்சாவடியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி மற்றும் பிரபாகரன் உள்ளிட்ட மூன்று பேரைப் பெரம்பலூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.