ADVERTISEMENT

புயல்பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடுவாரா? பதில் சொல்லாமல் நழுவிய பொன். ராதாகிருஷ்ணன்

11:59 PM Nov 17, 2018 | kalidoss


மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அதிக சேதம் தவிர்க்கப்பட்டது.

ADVERTISEMENT

மத்திய அரசின் கடலோர காவல்படை மூலம் 70 கப்பல்களில் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதனால் மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் தனி பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடே இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு வாழ்வாதரம் சரியாகும் வரை அரசு உணவை சமைத்து கொடுக்கவேண்டும்’’என்று கூறினார்.

ADVERTISEMENT

மேலும், ‘’ஆயிரக்கணக்கான மின் மாற்றிகளும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பலத்த சேதம் அடைந்துள்ளது. புயல் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு அளிக்கும் அறிக்கையை கொண்டு மத்திய அரசு நிதியுதவி அளிப்பது குறித்து பரிசிலனை செய்யும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் மட்டுமே எதிர்ப்பு நிலவுகிறது. எந்த வேலை வாய்ப்பு திட்டமும் தமிழகத்திற்கு வர வேண்டாம் என சிலர் நினைக்கின்றனர். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டா பகுதிகளில் நிறைவேற்றப்படும். இதனால் நேரிடையாகவோ மறைமகமாகவோ வேலைவாய்ப்பு அதிகாரிக்கும். புயல் பாதித்த பகுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளனர் இவர்களது உறவினர்கள் கவலை அடையவேண்டாம்.

தமிழக உள்ளாட்சி நிர்வாகத்திற்கு முதல் முறையாக மத்திய அரசு ரூ 1400 கோடி கொடுத்துள்ளது. தற்போது இரண்டாவது முறையாக தோராயமாக ரூ 1000 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 600 சமஸ்தானங்களை நமது நாட்டோடு இணைத்து அரும்பணியாற்றிய வல்லபாய் பட்டேலுக்கு சிலையை அமைத்ததில் எந்த தவறுமில்லை.

புயல்பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடுவது குறித்த கேள்விக்கும், உலக புகழ்பெற்ற சுற்றுலா, ஆன்மீக ஸ்தலமான சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஏழைகள் ரதமான அந்தியோதயா ரயில், சிவ ஸ்தலங்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்லும் புவனேஸ்வர் – ராமேஸ்வரம் ரயில், பைசாபாத் ரயில் என மூன்று ரயில்கள் நின்று செல்வதில்லை இதனை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்ற கேள்விக்கும் அமைச்சர் சரியான பதிலை கூறவில்லை. இவருடன் பாஜகவின் மாநில பிரச்சார அணிசெயலாளர் ராஜரத்தினம்,மாவட்ட பொதுச்செயலாளர் திருமாறன், நகர தலைவர் கனகசபை, கட்சியின் நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT