Advertisment

அரசியலில் கால் பதிக்கும் கமலஹாசனுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து!

அரசியல் பயணம் துவங்கி உள்ள கமலஹாசனுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். தொடர்ந்து மாலை மதுரையில் நடக்கும் அரசியல் பிரவேசப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

அரசியலில் கால் பதிக்கும் கமலஹாசனுக்கு என் வாழ்த்துக்கள். இனி தமிழ்நாட்டில் திராவிட பாணி அரசியல் எடுபடாது. இந்தியாவில் குடியுரிமை, வாக்குரிமை பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

Advertisment

கமலின் கொள்கை தெரிந்த பின்னரே தமிழக அரசியலா, தேசிய அரசியலா என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ponratha
இதையும் படியுங்கள்
Subscribe