Advertisment

வாக்கு மையத்தில் இருந்து வெளியேறி தனிமையில் அமர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமாி தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பின்னடைவை சந்தித்து வரும் பொன். ராதாகிருஷ்ணன் தொடா்ந்து 8 ஆவது சுற்றில் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள்வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வசந்தகுமாரை விட பின் தங்கி உள்ளாா்.

Advertisment

p

இந்த நிலையில் இரண்டாவது சுற்றில் வாக்கு மையத்தில் இருந்து வெளியே வந்த பொன். ராதாகிருஷ்ணன் வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்தில் உள்ள ஒரு செட்டில் தனிமையில் உட்காா்ந்து செல்போனில் தோ்தல் செய்திகளை பாா்த்து கொண்டியிருக்கிறாா். அதே போல் ஒவ்வொரு சுற்றிலும் தோ்தல் முடிவுகளை அறிவிக்கும் போது அதையும் குறித்து கொள்கிறாா்.

Advertisment

p

8- ஆவது சுற்றின் முடிவை குறித்து கொண்ட பொன். ராதாகிருஷ்ணன் இன்னும் 20 சுற்று இருக்கிறது. இருந்தாலும் எனக்கு நம்பிக்கை வரவில்லை. அதே நேரத்தில் மனம் தளராமல் தோ்தல் முடிவு முழுவதையும் அறிந்த பின்பு தான் இங்கிருந்து செல்வேன் என்று வழக்கம் போல் அவரை சந்திக்கும் பத்திாிக்கையாளா்களின் தோளில் தட்டி கூறுகிறாா்.

p

pon.rathakrishnan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe